Tuesday, December 25, 2007

ராகம்--- சங்கரபரணம்.


இசையே.. என் நிம்மதியின் அறை நான் மௌனமாகி என்னை நான் தேடுவது இந்த இசையின் அறையில்..


ராகம்--- சங்கரபரணம்.


இந்த ராகம் கேட்கும் போதே.. ஒரு அமைதி நல்ல தூக்கம் தரும் .இது 29 மேளகர்த்தா ராகம்

பாண சக்கரத்தில் ஜந்தாவது ராகம் கடபஜாதி ஸங்யைக்காக வேண்டி ; தீரசங்கராபரணம் என்று அழைக்கப்பட்டது.


சங்கராபரணம் ஒரு மூர்ச்சனாகாரக ராகம்

இதன் ரி. க .ம .ப. த மூர்ச்சனைகள் முறையே கரகரப்ரியா. தோடி.கல்யாணி.கரிகாம்போஜி. நடைபைரவி ராகங்களாகும். சங்-கர-தோடி.-கல்-கரி-நட. என்பதுஸீத்திரம்


இதன்

ஆரோகணடம்-ஸரிகமபதனிஸ்

அவரோகணம்-ஸ்நிதபமகரிஸ.


இந்த ராகத்தை ஜன்யராகமென்றும் இதன்

ஆரோகணம்.ஸ்தாபமகரிஸ என்றும் சிலர் கூறப்படுகின்றனர்

ஸதாப என்னும் நிஷாத வர்ஜபிரயோகம் இந்த ராகத்தில் அடிக்கடி வந்தபோதிலும் ஸ்நிதப என்னும் பிரயோகமே பெரும்பாலும் வருவதனால் அவரோகணத்தை ஸம்பூரணம் என்றும் கொள்வதே சரியாகும் சட்ஜ பஞ்சமங்களை தவிர இந்த ராகத்தில் வரும் ஸ்வரங்கள் -சதுஸ்ருதி ரிசபம் அந்தர காந்தாரம் சுத்த மத்திமம் சதுஸ்ருதி தைவதம் காகலி நிசாதம் .என ஸம்பூரண ராகம் ஸர்வ ஸ்வரகமக வரிக ரக்தி ராகம்.

ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் எல்லா ஸ்வரங்களும் ராகச்சாய ஸ்வரங்களாகும்.
ஸஸ ரிரி கக மம பப போன்ற ஜண்டைஸவரப்பிரயோகங்களும் ரிநி ஸ்த நிபதம பக மரி கஸ போண்ற தாடுஸ்வரபிரயோகங்களும். ராக ரஞ்சகமானi ஸ்நிபா. என்பது ஒரு அபூர்வமான விஷேச சஞ்சாரம் விஸ்தாரமான ஆலாபனைக்கு இடங்கொடுக்கும் ராகம் ஸ்லொகங்கள் பத்யங்கள் விருத்தங்கள் பாடுவதற்கேற்ற ராகம் எப்பொழுதும் பாடலாம் பூர்வாங்கமும் உத்தராங்கமும் ஒரே சீராய் அமைந்துள்ள மேள ராகங்களில் இதுவென்று. இந்த ராகத்தின் உருப்படிகள் பெரும்பாலும் சட்ஜ ரிஷப தைவத ஸ்வரங்கள் தீர்க்கமாகவும் கம்பிதமாகவும் பேசும் ஸநிதப என்னும் மந்திர ஸ்தாயி பிரயோகம் சௌக காளலத்தில் வருவது பொருந்தாது.

நவரோஜ ராகத்தின் களை அடிக்குமென்றே இந்த பிரயோகத்தை விலக்கப்பட்டிருக்கின்றது
ஸநிஸா-ஸநிஸதாநிஸ-ஸநிஸதநிபதாநிஸ என்றே சங்கராபரணத்தில் வரும ஆனால் மத்யம காலத்தில் ஸநிதப என்னும் பிரயோகம் வரலாம் திரிஸ்தாயி ராகம் கச்சேரியின் ஆரம்பத்தில் பாடுவதற்கு தகுந்த ராகம்.
இதில் பல சினிமா பாடல்கள் கூட பாடப்பட்டுள்ளது கேட்பதற்கு சுகம் இனிமை

----------
அன்புடன்

ராகினி

ஜெர்மனி.

No comments: