Monday, December 17, 2007

இசைப்பயணம்.





கவிதைக்குயிலினின் இசைப்பயணம்

ஓரு நாட்டின் பண்பாட்டு வளத்தையும், கலைப்பிரிவின் இசைத்திறத்தையும் வெளிப்படுத்தும் எந்த நாட்டு மொழியிலும் இந்த இசைக்கு ஒரு தனித்துவம் உள்ளதால், எங்கும் எந்தத் தாய்மொழியிலும் கொடுக்கப்படும் இசை புகழ்பெற்றதே.
இசைக் கருவிகளில் தோற்கருவிகள் மட்டுமே முப்பதுக்கு மேல் இருந்தன என்பார்கள். அதில் அகமுடிவு புறமுடிவு என அக்கருவிகளில் வகைப்படுத்தப்பட்டன. அகமுடிவு அமைதி கூட்டும் இன்னிசைக்கும், புறமுடிவு ஆராவரச் செயல்களுக்கு உரியதென்றும் உள்ளது. பண்களும் கூடக் காலத்துக்கேற்றாற் போல் வகைப்பட்டிருந்தன. இதில் தமிழ் இயற்கை மொழியாதலால் தமிழிசையும் இயற்கை இசையாகும். வில் நாண் தெறித்த ஒலியில் இருந்து யாழும், மூங்கிலில் வண்டுதுளைத்த ஓட்டை வளியே காற்றுப் புகுந்து வரும் ஒலியினைக் கேட்டு குழழும் கண்டு பிடித்தனர், இசைக்கு முலமான ஸ்வரங்களைத் தமிழின் உயிர் ஏழுமே தந்தன. இசை முறையில் ஆரோகண, அவரோகம் என வகுக்கப்பட்டுது இதைச் சேக்கிழர் ஆரோசை, அமரோசை என்று குறிப்பிட்டார்.
மக்கள் வாழ்க்கைக்கு இசை இனியதோர் மருந்தாகும். இன்பத்தில் மட்டும் இல்லாமல் துன்பத்தைத் தூக்கி எறியவும் இசை துணையாக உள்ளது. உழைப்பின் களைப்பைப் போக்க ஒரு மருந்தாகவும், மகளிரின் உள்ளத்தை மயக்கி, அவர்தம் அடாத கொடுமைகளில் இருந்து வழிச் செல்வோரைக் காத்ததாக இலக்கியம் பேசுகின்றது. அன்றைய காலத்தில் கூறப்பட்ட இந்த உண்மை இன்றும், என்றும் நோய் தீர்க்கும் மருந்தாக இருக்கும் இசைக்கு மிஞ்சிய வரம் ஏது? வண்டுகளின் ரீங்காரத்தில் புதர்களும் வாய் மலர்ந்தனவாம். இசைக்கு எங்கும் எதிலும் ஒரு மகத்துவம் உண்டு. இசையை ரசித்தால் மட்டும் போததாது. அதோடு நாம் கலந்து விடனும் அப்போதுதான் இசையை இன்பமாக ரசிக்க முடியும்.
இசை உணர்வுகளுடன் ஐக்கியமாகிப்போவதால் தான் நாம் அதனோடு ஆட்படுத்தப்படுகின்றோம். இன்றைய நிலையில் ஆடலும் பாடலும் தனித்தனியாகிய போதிலும், தொடக்கத்தில் இரண்டுமே ஒருங்கிசைந்தன. இந்தப் பிணப்புதான் இசை எதுவாக இருந்தாலும் நம்மை அசைக்கின்றது. அடி எடுத்து ஆடுவதற்குக் கூட இசை அசைவாக இருக்கணும், அதற்குரிய தாளம் சுருதி சேரனும் அப்போதுதான் நடனம் கூடச் சரியாக அமையும். ஆடலில் பிரிந்த பாடலுக்கு இசையமைதி தேவை. அதன் பொருற்டே எழுந்தன யாப்பு இசை இசையமைதி வருமாயின் யாப்பமைதியும் தானே அமையும். இலக்கியம் தெரிந்தவர்கள், இசை அறியாதவர்கள், இசை அறிந்தவர்கள், இலக்கியம் அறியாதவர்கள் என்று ஒருகாலத்தில் பேசப்பட்டது.
இதன் பொருட்டோ என்னவோ கர்நாடக இசை என்று அழைக்கப்படும் தமிழிசை பற்பல காரணங்களை முன்னிட்டு உருவம் தெரியாமல் காட்சி அளிக்கின்றது. இருப்பினும் தழில் இலக்கியத்தோடு தொடர்பு கொண்டுள்து.
இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்பது பொருள். மனிதனையும், மற்ற உயிரினங்களையும், இறைவணையும் இசைய வைக்கின்றது. இதோடு இணங்கச் செய்கின்ற இறைவன் கூட இசை வடிவமாய் இருக்கின்றான்.என்றது. இசை ஒரு அரும் சாதனம். இசை கட்டுப்பாடான, இனிமையான ஒலியாகும். இசை என்றாலே இனிமை, இனிமை இல்லை என்றால் அது இரைச்சல். இசையை வட மொழியில் நாதம் என்று அழபப்பார்கள். ஏன், இறைவன் கூட இசை வடிவில் இருக்கின்றான்.
பிறப்பு முதல் இறப்பு வரை இசை. இசை எங்கும் ஒலித்துகொண்டே இருக்கும்.
அன்புடன்,

தமிழ்க் குயில்
ராகினி,

ஜெர்மனி.





4 comments:

Unknown said...

arumai ,arumai,

rahini said...

ohh
nanri
nanri
ungkal varavukku

Senthiru said...

I like to detect raham of cinema songs. Why don't u post cinema songs in the pattern of swar sahithyam with mentioning the raham of the song.

thnx.
Senthiru

Senthiru said...

cinema songs with swara sahiththiyam is better way to learn raham