Thursday, March 19, 2009

பாகம் 1

தாளத்தின் 10 உயிர் நிலைகள்.

தாளத்தின் 10 உயிர் நிலைகள் அல்லது முக்கிய அம்சங்கள் என்று சொல்லப்படுவன. இவைகள்.

1- காலம்
2- அங்கம்.
3- கிரியை
4- கிரகம்
5- ஜதி
6- யதி
7- லயம்
8- களை
9- மார்க்கம்
10- பிரஸதாரம்

இதில் முதல் காலம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.

தாளப்போக்கின் அளவுக்கும் பாட்டு செல்லும் வேகத்தின் அளவுக்குமுள்ள தொடர்பைக் குறிப்பதே காலம் என்பார்கள்.

இசை பயிலத் துவங்கும் போது ஒரு தாள அட்சர எண்ணிக்கைக்கு ஒரு சுரமாகக் கொள்வதை முதல் காலம் என்றம் என்றும் ஒரு தாள அட்சர எண்ணிக்கைக்கு இரண்டு சுரங்களைக் கொள்வதை இரண்டாம் காலம் என்றும் நான்கு சுரங்களைக் கொண்டால் மூன்றாம் காலம் என்றும் வரையறுத்துச் சரளி வரிசைகள் கற்றுத் தரப்படுகின்றன. இவற்றுடன் மேல் ஸதாயி வரிசைகளும், கீழ் ஸ்தாயி வரிசைகளும், தாட்டு வரிசைகளும், அலங்காரமும் கற்றுத் தரப்படுகின்றன.

வர்ணங்களையும், கீர்த்தணைகளையும், கிருதிகளையும் பாடும் போது ஒரு தாள அட்சரத்துக்கு நான்கு சுரங்கள் என்ற வகையில் முதல் காலத்தைப் பாடி, பிறகு எட்டு சுரங்களை இரண்டாவது காலத்திலும், பதினாறு சுரங்களை மூன்றாவது காலத்திலும் இன்று பாடப்பட்டு வருகின்றன.

அதுதான் காலத்தின் பெருமையும் வழக்கமும்.

அடுத்தது அங்கம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

தாளத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் அதன் அங்கங்கள் என்று சொல்லப்படும். இவை கூட ஆறு வகைப்படும் இவற்றை சடாங்கங்கள் என்று அழைப்பதுண்டு.

1- அனுதுருதம்- அட்சர எண்ணிக்கை - 1
2- துருதம் அட்சர எண்ணிக்கை - 2
3- லகு அட்சர எண்ணிக்கை - 3.4.5.7.9
4- குரு அட்சர எண்ணிக்கை - 8
5- புலுதம் அட்சர எண்ணிக்கை - 12
6- காபாதம் அட்சர எண்ணிக்கை - 16

அனுதுருதம், துருதம், லகு ஆகிய இவை மூன்றும் சப்த தாளங்களில் வருவதை நாம் காணலாம். குரு, புலுதம், காபாதம் ஆகியவை 108 தாள அமைப்பில் வருவாதாக கூறப்படுகின்றன.

சடாங்கங்களுடன் விராமம் என்ற ஓர் அங்கத்தை ஒவ்வொரு இடங்களிலும் பொருத்தமாகச் சேர்க்கும் போது சோடசாங்கங்கள் என்று கூறப்படுகின்றன. இதில் கூட பதினாறு பிரிவுகள் உண்டு.

அனுதுருதம்
துருதம்
துருத விராமம்
லகு
லகுவிராமம்
லகு துருதம்
லகு துருத விராமம்
குர
குரு விராமம்
குரு துருதம்
கரு துருத விராமம்
புலுதல்
புலுதவிராமம்
புலுதுருதம்
புலுததுருதவிராமம்
காகபாதம்.

என்று. ஒவ்வொன்றின் விளக்கங்களையும் பார்க்கும் போது ஒன்றோடு ஒன்று சேர்ந்தே உள்ளன.

பாகம் 2

கிரியை.

தாளத்தின் அங்கங்களை கைச்செயலில் காட்டுவதே கிரியை எனப்படும் இதன் வைக இரண்டாகும்.

1- சப்த கிரியை
2- நிசப்த கிரியை

தாளத்தின் அங்கத்தினை கைகளினால் ஓசையுடன் காட்டும் போது சப்த கிரியை என்று பெயர். உதாரணமாக ஆதி தாளத்தை எடுத்துக்கொண்டால். லகுவின் முதல் அட்சரத்தைத் தட்டிக் காட்டுகின்றோம். இது சப்த கிரியை என்பது. அதன் விரல் எண்ணிக்கை தான் நிசப்தகிரியை.

அடுத்த துருதத்தின் ஆரம்பம் தட்டு. சப்த கிரியை கையை வீசிப் போடும்போது நிசப்த கிரியை, அடுத்து வரும் துதுருதத்தின் தட்டு சசப்த கிரிய, அடுத்து வீச்சு நிசப்த கிரியை. இதுதான் ஆதிதாளத்தின் அடையாளத்தோடு ஒவ்வொரு தாள அமைப்புக்கும் ஏற்படும் பெயர்.

ஆதி தாளம் முதல் தட்டு, அதன் பின் 3விரல் எண்ணிக்கை, அதன் பின் ஒரு தட்டு, அதன் பின் கையை வீசுதல், அதன் பின் ஒரு தட்டு அதன் பின் கையை வீசுதல். இதன் எண்ணிக்கை 8 ஆகும்.

சப்த கிரியைகள் என்றால்:- அனு துருதம்; துருதத்தின் ஆரம்பத்தட்டு; லகுவின் ஆரம்பத்தட்டு; குரு; பலுதல்; காகபாதம்; ஆகியவைகளின் ஆரம்பத்தட்டு.

நிசப்த கிரியைகள் ;- துருதின் வீச்சு ;லகுவின் விரல் எண்ணிக்கை; குரு; புலுதல்; காகபாதம்; இவைகளின் ஆரம்ப தட்டை தொர்டவது கிரியைகள்.

கிரகம்.

ஒரு தாள ஆவர்த்தத்தில் பாட்டு ஆரம்பிக்கும் இடத்தின் போது கிரகம் அல்லது எடுப்பு என்று சொல்வார்கள்.

இதுவும் இரண்டு வகைப்படும்.

1- சமக்கிரகம்
2- விசமக்கிரகம்.

தாள ஆவர்த்தம் ஆரம்பிக்கும் அதே சமயத்தில் பாட்டும் ஆரம்பிக்குமானால் அதற்கு சம கிரகம் என்று பெயர். கல்யாணி ராகத்தில் தாள ஆவர்த்தனம் ஆரம்பிக்கும் போதே பாட்டும் ஆரம்பமாகும்.

ஜதி

ஜதி லகுவின் எண்ணிக்கையை நிர்ணயிக்கிறது லகுவிற்கு 5 ஜதிகள் உண்டு.

திச்ரம்
சதுஸ்ரம்
கண்டம்
மிச்சரம்
சங்கீர்ணம்

இந்த 5 ஜாதிகளும் அமைப்பால் தான் 7 தாளங்கள் 35 தாளங்களாக விரிவடைகின்றன.

யதி

ஒரு தாளத்தின் அமைப்பில் அங்கங்களை பல வகைகளில் விவரித்து காட்டும் முறைக்கு யதி என்று பெயர். இது 6 வகைப்படும்.

சம யதி
கோபுச்ச யதி
ச்ரோதோவக யதி
டமரு யதி
மிருதங்க யதி
விசமயதி.

லயம்

தாளத்தின் காலப்பிரமாணமே லயம் என்பது இது 3 வகைப்படும் விலம்பித லயம்
மத்திய லயம்
துரித லயம்

விரம்பித லயம் தாளத்தின் போக்கு மெதுவாக செல்லும் போது-
மத்திய லயம் தாளத்தின் போக்க மெதுவாக செல்லும் போது-
துரித லயம் தாளத்தில் மெதுவாக செல்லும் போது- ஏற்படுகின்றது.

களை

ஒரு தாள அச்சரத்தில் காணப்படும் சிறிய பகுதிதான் களை என்பதாகும் இது 3 வகை ப்படும்.

ஏக களை
துவி களை
சதுஸ்ரகளை
கீதங்களின் ஏக களையையும் வர்ணங்களில் பல கிருதிகளிலும் பல்லவிகளில் சதுஸ்ர களையையும் கண்கின்றோம்.

மார்க்கம்

மார்க்கம் என்றால் வழி என்று பொருள். ஓர் இசை வடிவத்தில் ஒரு தாள எண்ணிக்கைக்கு இத்தனை சுரங்கள் அமைக்கப்பட்டிருப்பதை இசை வடிவத்தின் மார்க்கம் என்று சொல்லகின்றோம். இது 6 வகைப்படும்.

தட்சிண மார்க்கம்
வார்த்திக மார்கம்.
சித்திர மார்க்கம்
சித்திர தர மார்க்கம்.
சித்திர தம மார்க்கம்
அதி சித்திர தம மார்க்கம்.

இந்த 6 மார்க்கமும்

முதல் 3 ம் பல்லவிகள் பாடும் துறையில்தான் பயன்படுத்தப்படுகின்றது.
மகுதி 3ம். கிருதிகளிலும் மற்றைய இசை வடிவங்களிலும் கையாண்டு வருகின்றன


Thursday, June 19, 2008

தொல்கர்பியர்

இசை மாமேதைகளின் ஒருவரானதொல்கர்பியர்.
பற்றிய விளக்கம் .
-------

தொல்காப்பியரின் காலம் கி.மு 7 ஆம் நூற்றாண்டிற்க்கு முந்தியது என்று கூறப்படுகின்றன.

இவர் இயற்றிய நூல் தெல்கபப்பிய இலக்கண நூலாகும் இந்த நூல் எழுத்துச்சொல் ; பொருள் என்று முன்றுவகையானது.

இந்த நூலின் பெருமை என்ன வென்றா இசை பற்றிய பல அரிய செய்திகளை வாரி வளங்கப்பட்டன.

இதில் ஜவகை நிலங்கள் .ஜவகை யாழ் வகைகள் . ஜவகை பறை வகைகள் சுட்டிக்கட்டப்பட்டுளது. இதில் எண் என்பது. 1-2-3-4-5 நிலம் -என்பது - முல்லை நிலம்; குறிஞ்சி நிலம்; முருத நிலம்; நெய்தல் நிலம் ; பாலை நிலம்.

யாழ் என்பது- முல்லை யாழ்; குறிஞ்சி யாழ் ; மருத யாழ் நெய்தல் யாழ்; பாலை யாழ்.

பறை- என்பது- ஏறுகோட்பறை ; தொண்டகப்பறை :நெல்லரிகிணை மீன்கோட்பறை.

தொல்காப்பியத்தில் யாழ் ஒரு கருப்பொருளாகவும் யாழின் பகுதி ஒரு கருப்பொருளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றும் யாழ் ஏழு நரம்புகளை கொண்ட பெரும் பண்ணையும் யாழின் பகுதி சிறு பண்ணையும் குறித்தது.தொல்காப்பியம் பல்வேறு இசைப்பாடல்களை விளக்ககின்றது 1- கலிப்பாடல் 2- பரிபாடல் 3- தேவபாணி 4- வெண்பா 5-ஆசிரியம் 6- பண்ணித்தி முதலியவையாகும் .மேலும் ஒலிகள் பிறக்கத் துனை செய்யும் உறுப்புக்களை விரிவாக வகைப்படுத்தி கூறுகின்றது நாவின் அசைவாலும் உதட்டின் அசைவாலும் உதடுகளை குவிப்பதிலும் விரிப்பதிலும் இசையில் ஒலிகள் தேன்றுவது விளக்கப்பட்டுள்ளது .

அடிவயிற்றில் இருந்து இசை ஒலி எழும்பப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. துள்ளல் தூங்கல் அகவல் ஆகிய ஓசைகளை அமைக்கும் முறைகளை காட்டப்பட்டுள்ளது. குறளடி ; சிந்தடி: அளவடி; நெடிலடி; கழி நெடிலடி என பாடல் அடிகளின் வகை காலக் கணித மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . ஓவ்வொரு இசைத்துறை நடத்தியதை தொல்காப்பியம் குறிப்பிடுகின்றன முல்லை பண்ணும் : குறிஞ்சிப்பண்ணும் மகிழ்ச்சி சுவைக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. நெய்தல் பண் இரங்கல் சுவைக்கு உரியவை. முரதப் பண்- வெகுளிச் சுவைக்கு உரியவை. தொல் காப்பியம் குறிப்பிடுகின்றது. எஞ்சியுள்ள பெரும் பொழுது சிறிய பொழுது பற்றி தொல்காப்பியத்துக்கு முன்னரே பத்து பாட்டில் எட்டுத்தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.பாடல்களை காலப்படுத்தி பாடும் முறை தொல் காப்பியம் தொடங்கி மரபாக வருகின்றது தொல்காப்பியத்தில் உள்ள இசை பற்றிய ஒவ்வொரு செய்திகளை தொகுத்து எடுத்தால் ஓர் அரிய இசை நூல் ஒன்று உருவாக்கி எடுக்கலாம்.

மீண்டும் வருவாள்
இந்த இசைகவிக்குயில்
ராகினி
isaikuyil@googlemail.com

Monday, June 2, 2008

குரலிசையும் கருவியும் இசையையும் ஒன்றாக அறிதல்

குரலிசையும் கருவியும் இசையையும் ஒன்றாக அறிதல்.
----

குரல் இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு அரிய சாதனம் இதை பாதுகாக்க வேணஇடியது நாம்தான் அதிகமான குளிர் நீர் அருந்துல் தவறு அதகமான சுடு நீர் அருந்துவதும் தவறு. இரண்டுமே நம் குரலை பாதிக்கும். நாம் பாடுவது ஒவ்வொரு வருடைய முயற்ச்சியாகும். பாடுதல் என்பது ஒரு மிகச்சிறந்த கலையாகும் குரல் இல்லாதவனுக்க விரல் உண்டு என்பது பாட இருப்பவருக்க வாத்தியம் இசைப்பவர் வேண்டும் என்பதுதான் கருத்து.
பாடுவது மற்றவர் பாடுவது போல் பாட முயற்சி எடுத்து பாட மடியும் ஆனால் வாத்தியம் அப்படி அல்ல.

நல் ஆசிரியரிடம் இருந்து கற்றக்கொள்ள வேண்டும். பாடகர் சாதரணமா நினைத்தவடன் பாட முடியும் ஆனால் வாத்தியம் வாசிக்க முடியாது தனது கருவியை முதலில் ஒழுங்கு செய்த பின்தான் வாசிக்க முடியும். குரலிசையால் நாம் பெறும் மிகப்பெரிய நன்மை என்ன வென்றால் பாடல்களில் வரிகளை நாம் கேட்டு மகிழ முடியும். கருவி இசை வடிவில் சொற்களை தெளிவாக கேட்டு ரசிக்க முடியாது இசையை மட்டுமே ரசிக்க முடியும். குரலிசை வழியாகத்தான் சங்கதிகளை கேட்டு ரசிக்க முடியம்.

ஒரே இராகத்தில் வெ வ்வெறு மெட்டுக்களை ஞாகப்பகத்தில் வைத்துக்கொள்வதற்கு சாகித்தியம் தெரிந்து இருப்பது அவசியம்.இசைக்கறியீடு பயன்படுத்தப்படாத முற்காலத்தில். பாடல்களின் மெட்டுக்கள் ";இப்பாடல் ரதிசுகசாரே என்ற மெட்டில் அமைக்கப்பட்டது என்று குறிப்பிடுவார்கள்.

குரலிசையாலர் பாடுவதற்கு தானே தாளத்தை போடுவதற்க்க வாய்ப்புள்ளது கருவி வாசிப்பவர்களுக்க இந்த வசதி கிடையாது புல்லாங்குழழ் வயலின் வாசிப்பவர்கள் தங்கள் கால்களாhல் தாளம் போட்டுக்கொள்வார்கள். ஆனால் சில சமயம் தாளம் தவறி விடும்.
ஜதிகளைக் கொண்ட பாடல்களும் தலஇலானாக்களும் பாடப்படும் பொதுதான் கெட்க இன்பமாய் இருக்கும்.

சில சமயம் ஏறக்குறைய ஓரெ விதமான இசை அமைப்பைக் கொண்ட இரண்டு கிருதிகளில் ஒற்ரைக்கருவிகளில் வாசிக்கும் போது கேட்ப்பவருக்கு உண்மையில் எந்தக்கிருதி வாசிக்கப்படுகின்றது என்ற சந்தேகம் வரும்.ஆனால் குரலிசை சந்தேகத்தை தராது.
கருவி இசையாளர்கள் குரலிசையையும்கற்று வாத்தியத்தை வாசித்தால் சிறப்பாக இருக்கும்.
------

குரலிசையாலர் கடைப்பிடிக்க வேண்டியநிறைகள்.
-------------------


தெளிவான இனிமையாயன கயவர்ச்சியான குரலை கொண்டிருத்தல்.
உறுதியான சுருதி ஞானமும், சுர ஞானமும், இராக ஞானமும் தாள ஞானமும் பெற்றிருத்தல்.
சுருதியும் லயமும் வழுவாது பாடுதல்.
நல்ல கற்பனை லயம் பெற்றிருத்தல்
இயல் ஞானம் முழமையாக பெற்றிருத்தல்.
இரண்டரை ஸ்தாயி வரைக்கும் சிரமமிலஇலாமல் பாடுவதற்கு ஏறஇற சாரீர வளம் கொண்டிருத்தல் இதாவது அழுத்தமாக இருக்கனும். தான் வீரும்பிய சுரக் கோர்வையை பளிச்செனஇறு பாடக்கூடிய சாரீரம் இருக்கனும். இசை நிகழ்சஇசியின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை குரலின் வன்மை குறையாதிருத்தல் வேண்டும் முகம் மலர்ந்து புன்னகை சிந்தி தன்னம்பிக்கையுடன் பயம் விலக்கி பாடனும்.
ஒவுஇவொரு சங்கதிகளும் துரித காலப் பிரயோகங்களும் வழக்கமா கேட்ககூடியதாக பாடனும்.
இசை வடிவங்களை அவற்றுக்குரிய காலவடிவத்தில் பாடுதல். இராகமும் தாளமும் நன்க வெளிப்படும் படியாக வேண்டிய இடங்களில் அழுத்தமாகவும் நயத்துடனும் பாட வேண்டும்.
சாகித்திய வரிகளை நன்றாக உச்சரிச்சு அதன் பொருளை நன்றாக விளங்கக்கூடியதாக பாடவேண்டும். பாமர மக்களும் புரியும் படியாக இருத்தல் வேண்டும்.
நல்ல ஞாபப் படுத்தி சந்தேகத்தை விளத்தி உற்ச்சாகமாக பாடனும்.
வாத்தியக்கருவிகளுடன் ஒத்துப்பொக வேண்டும். சுருதி விளகாது பாடுதல் வேண்டும்.
முக்கியமாக ரசிகர்களை கவரும் படியாக நல்ல தெளிவான முறையில் பாட வேண்டும்.

இததான் வாத்திய இசைக்கும் குரலும் உள்ள வேறு பாடு.
மீண்டும் வருவாள்
கவிதைக்குயில் ராகினி
இசையின் ஊடாக.

kavithaikuyil@mail.com

Friday, February 29, 2008

ஒவ்வொரு அமைப்புக்கள்

என் குரல் வடிவில் வரும் சிறுகதைகள் இங்கே


http://kuyil.mazhalaigal.com/



ஸ்தாயி

---------


சட்ஜம் முதல் நிசாதம் வரையிலுல்ல சுரக்கோர்வையை அல்லது சுர எல்லையை ஒரு ஸ்தாயி என்கின்றோம்.

இவை மூன்று வகைப்படும்


1-- மத்தியஸ்தாயி

2--மந்திரஸ் தாயி

3-- தாரஸ்தாயி
பண்டைக்காலத்து பேரியாழில் மெலிவு ;சமன் வலிவு ஆகிய மூன்று மண்டிலங்களும் அமைந்திருந்தன என்றும்; மந்திரஸ்தாயிக்கு கீழே உள்ள அன மந்திரஸ்தாயி அதி மெலிவு மண்டலம் என்றும் தாரஸ்தாயிக்கு மேலே உள்ள அதிதாரஸ்தாயி அதிவலி மண்டிலம் என்றும் அழைக்கப்படும் என்று விபுலானந்தர் எழுதிய யாழ் நூல் என்ற இசை நூலில் அறிந்தோம்.


இந்த வலிவு மண்டிளக் குரல் இரட்டித்து ஒளிக்கின்றது அதனால் இதற்கு இரட்டித்த குரல் என்றும் உயர் குரல் என்றும் சொல்லப்படும்.

எனவே தரஸ்தாயி சட்ஜம் உயர் குரல் என்று அழைக்கப்பட்டன.


பூர்வாங்கம்- உத்திராங்கம்.


ஸரிகமபதநிஸ் என்ற சுரக்கோர்வையில் முன் பகுதியாகிய ஸரிகம.பூர்வாங்கம் என்றும். பின்பகுதியாகிய பதநிஸ் உத்தராங்கம் என்றும் அழைக்கப்படும் இதைதான் முன்னர்பாகம் பின்னர்பாகம் என்று பழந்தமிழர் கூறினர்.



சுவராவளி.


சுவரம்-ஆவளி- சுவராவளி
ஆவளி என்றால் வரிசை என்று சொல்லப்படும். சுவராவளி என்றால் சுரங்களின் வரிசை என்று சொல்வது. இதை சுரளி வரிசை என்றும் கோவை வரிசை என்றும் சொல்வதுண்டு.



ஜண்டவரிசை
------


இதன் பொருள் ஒவ்வொரு சுரமும் இரட்டையாக வரும்படி அமைக்கப்பட்ட சுரவரிசைக்கு ஜண்டவரிசை என்று பொருள் இதை இரட்டைகோவை என்றும் சொல்வதுண்டு. சுவராவளி கற்றபின் ஜண்டவரிசை பயில வேண்டும்அப்போதுதான் கற்பதற்கு சுலபமாக இருக்கும்.


கெச்சுஸ்தாயி வரிசை

---

இதை உயர் குரல் என்று அழைப்பது. தாரஸ்தாயி சட்ஜத்துக்கு மேலுள்ள சுரங்களில் பஞ்சமம் வரைடி பயிற்சி அழைப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட வரிசை இதை வலி மண்டில வரிசை என்றும் சொல்வது.


தக்குஸ்தாயி

---


மத்தியஸ்தாயி சட்ஜத்துக்கு கீழே உள்ள சுரங்களில் பஞ்சமம் வரை பயிற்ச்சுpக்கு ஏற்படுத்தப்பட்ட வரிசைதான் ஆனால் இதை மெலிவுமண்டல வரிசை என்றும் சொல்வது .


தாட்டுவரிசை

-------------


சுரங்களை இடையிடையே விட்டுத்தாண்டிச் செல்லும் வரிசை எனவே இதற்கு பொருத்தமாண பெயர் தாண்டு வாரிசை யாகும்.


தாளம்.
--

பாட்டின் போக்கை அழகு படுத்துவது அதாவது வரை முரை படுத்துவது தாளம்.தாளம் அமைந்தாள் தான் பாடும் சுரஞ்கள் சரியாக அமையும் சில வாத்தியக் கலைஞர்களை கவனித்தால் அவர்கள் கை இசைக்கருவியை வாசிக்கும் போது அவாக்ள் கால் தாளம் போடும் பாடல் அமைவதற்கு தாளம் முக்கியம்.

அலங்காரம்.

--------

வெவ்வேறு தாளத்தின் இங்க அமைப்புக்கு தகுந்தால் போல் ஒவ்வோரு விதமாக அமைக்கப்பட்ட சுர வரிசைக்கு அலங்காரம் என்ற பெயர். தாளத்துக்கு ஏற்ற சுரங்களை அடுக்குவதால் இதை அடுக்கு அணி என்றும் சொல்வது. இப்படி 7 அலங்காரங்கள் உண்டு


1- துருவம்

2- மட்டியம்

3- திரிபுடை

4- ரூபகம்

5- ஜம்பை

6- அட

7- ஏகம்.


இதுதான் அலங்காரத்தின் சிறப்பு



அட்சர காலம்

--

அட்சரம் அட்சராகாலம் இரண்டும் ஒன்று தாளத்துக்கு நாம் பயன்படுத்தப்படும் அடிப்படையான எண்ணிக்கைக்கு அட்சரகாலம் என்று சொல்வது அட்ச்சரங்களின் எண்ணிக்கை தாளத்திற்கு தாளம் மாறுபடும்.

ஆதி தாளத்துக்கு 8 அட்சரங்கள் ரூபகதாளத்திற்கு 6 இப்படி ஒவ்வொரு தாளம் ஒவ்வொரு எண்ணிக்கை கொண்டவை.



ஆவர்த்தம்

--

எந்த ஒரு தாளத்தை எடுத்துக்கொண்டாலும் அதை ஒரு முறை முழுமையாக போடும் போது அல்லது இசைக்கருவியில் வாசிக்கும் போதும் அதை ஒரு ஆவர்த்தம் என்ற அழைக்கின்றோம்.

இதுதான் ஆதி தாளத்தின் 8அட்சரகாலம்.

--
அன்னியசுரம்


சில ராகம் சில சமயங்களில் வழக்கமாக வரவோண்டிய சுரங்களுக்கு மாறாக வேற்ற சுரங்கள் வரலலாம். அவற்றிக்குத்தான் அன்னிய சுரம் என்று பொருள் காம் பொதி ராகத்தில் காகலி நிசாதமம் பிலகறி ராகத்தில் ராகத்தில் கைசிகி நிசாதமும் அன்னிய சுரங்களாகும் அhற்றங்களாகும் போதுதான் அன்னிய சுரங்கள் என்ற பொருள்




Tuesday, February 26, 2008



என் குரலில் குழந்தைகளுக்கான சிறுகதை களை கேட்டு மகிழ இங்கே செல்லுங்கள்

http://kuyil.mazhalaigal.com/podcast.php

Wednesday, January 30, 2008