Thursday, June 19, 2008

தொல்கர்பியர்

இசை மாமேதைகளின் ஒருவரானதொல்கர்பியர்.
பற்றிய விளக்கம் .
-------

தொல்காப்பியரின் காலம் கி.மு 7 ஆம் நூற்றாண்டிற்க்கு முந்தியது என்று கூறப்படுகின்றன.

இவர் இயற்றிய நூல் தெல்கபப்பிய இலக்கண நூலாகும் இந்த நூல் எழுத்துச்சொல் ; பொருள் என்று முன்றுவகையானது.

இந்த நூலின் பெருமை என்ன வென்றா இசை பற்றிய பல அரிய செய்திகளை வாரி வளங்கப்பட்டன.

இதில் ஜவகை நிலங்கள் .ஜவகை யாழ் வகைகள் . ஜவகை பறை வகைகள் சுட்டிக்கட்டப்பட்டுளது. இதில் எண் என்பது. 1-2-3-4-5 நிலம் -என்பது - முல்லை நிலம்; குறிஞ்சி நிலம்; முருத நிலம்; நெய்தல் நிலம் ; பாலை நிலம்.

யாழ் என்பது- முல்லை யாழ்; குறிஞ்சி யாழ் ; மருத யாழ் நெய்தல் யாழ்; பாலை யாழ்.

பறை- என்பது- ஏறுகோட்பறை ; தொண்டகப்பறை :நெல்லரிகிணை மீன்கோட்பறை.

தொல்காப்பியத்தில் யாழ் ஒரு கருப்பொருளாகவும் யாழின் பகுதி ஒரு கருப்பொருளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றும் யாழ் ஏழு நரம்புகளை கொண்ட பெரும் பண்ணையும் யாழின் பகுதி சிறு பண்ணையும் குறித்தது.தொல்காப்பியம் பல்வேறு இசைப்பாடல்களை விளக்ககின்றது 1- கலிப்பாடல் 2- பரிபாடல் 3- தேவபாணி 4- வெண்பா 5-ஆசிரியம் 6- பண்ணித்தி முதலியவையாகும் .மேலும் ஒலிகள் பிறக்கத் துனை செய்யும் உறுப்புக்களை விரிவாக வகைப்படுத்தி கூறுகின்றது நாவின் அசைவாலும் உதட்டின் அசைவாலும் உதடுகளை குவிப்பதிலும் விரிப்பதிலும் இசையில் ஒலிகள் தேன்றுவது விளக்கப்பட்டுள்ளது .

அடிவயிற்றில் இருந்து இசை ஒலி எழும்பப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. துள்ளல் தூங்கல் அகவல் ஆகிய ஓசைகளை அமைக்கும் முறைகளை காட்டப்பட்டுள்ளது. குறளடி ; சிந்தடி: அளவடி; நெடிலடி; கழி நெடிலடி என பாடல் அடிகளின் வகை காலக் கணித மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . ஓவ்வொரு இசைத்துறை நடத்தியதை தொல்காப்பியம் குறிப்பிடுகின்றன முல்லை பண்ணும் : குறிஞ்சிப்பண்ணும் மகிழ்ச்சி சுவைக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. நெய்தல் பண் இரங்கல் சுவைக்கு உரியவை. முரதப் பண்- வெகுளிச் சுவைக்கு உரியவை. தொல் காப்பியம் குறிப்பிடுகின்றது. எஞ்சியுள்ள பெரும் பொழுது சிறிய பொழுது பற்றி தொல்காப்பியத்துக்கு முன்னரே பத்து பாட்டில் எட்டுத்தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.பாடல்களை காலப்படுத்தி பாடும் முறை தொல் காப்பியம் தொடங்கி மரபாக வருகின்றது தொல்காப்பியத்தில் உள்ள இசை பற்றிய ஒவ்வொரு செய்திகளை தொகுத்து எடுத்தால் ஓர் அரிய இசை நூல் ஒன்று உருவாக்கி எடுக்கலாம்.

மீண்டும் வருவாள்
இந்த இசைகவிக்குயில்
ராகினி
isaikuyil@googlemail.com

No comments: