Tuesday, December 25, 2007

ராகம்--- சங்கரபரணம்.


இசையே.. என் நிம்மதியின் அறை நான் மௌனமாகி என்னை நான் தேடுவது இந்த இசையின் அறையில்..


ராகம்--- சங்கரபரணம்.


இந்த ராகம் கேட்கும் போதே.. ஒரு அமைதி நல்ல தூக்கம் தரும் .இது 29 மேளகர்த்தா ராகம்

பாண சக்கரத்தில் ஜந்தாவது ராகம் கடபஜாதி ஸங்யைக்காக வேண்டி ; தீரசங்கராபரணம் என்று அழைக்கப்பட்டது.


சங்கராபரணம் ஒரு மூர்ச்சனாகாரக ராகம்

இதன் ரி. க .ம .ப. த மூர்ச்சனைகள் முறையே கரகரப்ரியா. தோடி.கல்யாணி.கரிகாம்போஜி. நடைபைரவி ராகங்களாகும். சங்-கர-தோடி.-கல்-கரி-நட. என்பதுஸீத்திரம்


இதன்

ஆரோகணடம்-ஸரிகமபதனிஸ்

அவரோகணம்-ஸ்நிதபமகரிஸ.


இந்த ராகத்தை ஜன்யராகமென்றும் இதன்

ஆரோகணம்.ஸ்தாபமகரிஸ என்றும் சிலர் கூறப்படுகின்றனர்

ஸதாப என்னும் நிஷாத வர்ஜபிரயோகம் இந்த ராகத்தில் அடிக்கடி வந்தபோதிலும் ஸ்நிதப என்னும் பிரயோகமே பெரும்பாலும் வருவதனால் அவரோகணத்தை ஸம்பூரணம் என்றும் கொள்வதே சரியாகும் சட்ஜ பஞ்சமங்களை தவிர இந்த ராகத்தில் வரும் ஸ்வரங்கள் -சதுஸ்ருதி ரிசபம் அந்தர காந்தாரம் சுத்த மத்திமம் சதுஸ்ருதி தைவதம் காகலி நிசாதம் .என ஸம்பூரண ராகம் ஸர்வ ஸ்வரகமக வரிக ரக்தி ராகம்.

ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் எல்லா ஸ்வரங்களும் ராகச்சாய ஸ்வரங்களாகும்.
ஸஸ ரிரி கக மம பப போன்ற ஜண்டைஸவரப்பிரயோகங்களும் ரிநி ஸ்த நிபதம பக மரி கஸ போண்ற தாடுஸ்வரபிரயோகங்களும். ராக ரஞ்சகமானi ஸ்நிபா. என்பது ஒரு அபூர்வமான விஷேச சஞ்சாரம் விஸ்தாரமான ஆலாபனைக்கு இடங்கொடுக்கும் ராகம் ஸ்லொகங்கள் பத்யங்கள் விருத்தங்கள் பாடுவதற்கேற்ற ராகம் எப்பொழுதும் பாடலாம் பூர்வாங்கமும் உத்தராங்கமும் ஒரே சீராய் அமைந்துள்ள மேள ராகங்களில் இதுவென்று. இந்த ராகத்தின் உருப்படிகள் பெரும்பாலும் சட்ஜ ரிஷப தைவத ஸ்வரங்கள் தீர்க்கமாகவும் கம்பிதமாகவும் பேசும் ஸநிதப என்னும் மந்திர ஸ்தாயி பிரயோகம் சௌக காளலத்தில் வருவது பொருந்தாது.

நவரோஜ ராகத்தின் களை அடிக்குமென்றே இந்த பிரயோகத்தை விலக்கப்பட்டிருக்கின்றது
ஸநிஸா-ஸநிஸதாநிஸ-ஸநிஸதநிபதாநிஸ என்றே சங்கராபரணத்தில் வரும ஆனால் மத்யம காலத்தில் ஸநிதப என்னும் பிரயோகம் வரலாம் திரிஸ்தாயி ராகம் கச்சேரியின் ஆரம்பத்தில் பாடுவதற்கு தகுந்த ராகம்.
இதில் பல சினிமா பாடல்கள் கூட பாடப்பட்டுள்ளது கேட்பதற்கு சுகம் இனிமை

----------
அன்புடன்

ராகினி

ஜெர்மனி.

Friday, December 21, 2007

சுருதி



சுருதி




சுருதி என்றால் ஆதார ஒலிநிலை ஒலி எல்லை அல்லத அடிப்படை ஒலி அளவு என்று கூறலாம்.


நாம் பாடும் போது சாதாரணமாக மத்தியஸ்தாயி சட்ஜத்தையே ஆதாரமாக கொள்கின்றோம் இதற்கு சுருதி என்று பெயர்.


சுருதிக்கருவியாகிய தம்புராவில் 4 தந்திகள் ப ஸஸஸ என்ற வகையில் இணைக்கப்பட்டுள்ளன சுருதிப்பெட்டியில் ஸபஸ் சுரங்கள் ஒலிக்கும் ஒவ்வொரு குரலுக்கு ஏற்றவாறு ஒலி நலை மாறத்தான் செய்யும் ஆண்கள் பாடும் சுருதி ஒன்று அல்லது ஒன்றரைக் சுருதிக்கட்டையில் பாடுவார்கள். பெண்கள் நாலரை அல்லது ஜந்து சுருதிக்கட்டையில் பாடுவார்கள்.



சுருதியை இரண்டு வகையாயகப்பிரிப்பதுண்டு




1- பஞ்சம சுருதி இது மத்தியஸ் தாயி சட்ஜத்தை ஆதாரமாக கொள்ளும் போது எடுக்கும் சுருதி


2- ஆதாரமாக எடுத்துக்கொண்ட சட்ஜத்துக்கு மத்தியமமாகிய மத்தியஸ்தாயி மத்திமத்தை ஆதார சட்ஜமாக கொள்ளும் போது எடுக்கும் சுருதி.



சுருதி என்ற சொல்லுக்கு மற்றப்பொருள் நுட்பமான சுரம்.


ஒரு ஸ்தாயில் 12 சுரஸ்தானங்கள் இருந்தாலும் 22 குறையாத சுருதிகள் இருப்பதை கண்டு பிடிக்கப்பட்டன


இதுதான் சுருதியின் தனித்துவம்.


அன்புடன்



தமிழ் குயில்



ராகினி



ஜெர்மனி.






Wednesday, December 19, 2007

நாதம் -இசை -ராகம்


நாதம் -இசை -ராகம்

-----------------

நாதம் என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழ் ஒலி இசை என்று பெயர்.இனிமையயை தருகின்ற ஒலியே நாதம் அல்லது இசை ஒலியாகும் நாதத்ததை ஆகாத நாதம் என்றும் அனாகத நாதம் என்றும் பிரிப்பார்கள்.


மனித முயற்சியால் ஏற்படும் நாதத்திற்கு ஆகாத நாதம் என்றும்.

இயற்க்கையில் காணப்படும் நாதத்திற்கு அனாகத நாதம் என்றும் பொருள் படும் குரலிசையும் கருவி இசையும் நாட்டிய இசையும் ஆகத நாதத்தை சேர்ந்தது.நாதம் என்ற இசை ஒலியை ஒரு கடலுக்கு ஒப்பிட்டால். சுரங்களை கடலுக்குள் இருக்கும் முத்துக்களை ஒப்பிடலாம்.ஒவ்வொரு சுரமும் ஒரு தனிப்பட்ட அளவு கொண்ட இசைஒலியாகும் முத்துக்கள் பொண்ற சுரங்களை பல்வேறு முறையில் தொகுக்கும் பொழுது இராகங்கள் என்ற முத்துமாலைகள் நமக்கு கிடைக்கின்றன.


ஒவ்வொரு முத்துமாலையும் ஒரு தனி வடிவத்தை கொண்டுள்ளது. எனவே நாதம் என்ற இசை ஒலியிலிருந்து சுரங்களும்

சுரங்களில் இருந்து ராகங்களும் தோண்றுகின்றது.


சுரங்கள் 7 வகையாகும்.

1- சட்ஜம் என்று அழைக்கப்படும் குரல்.

2- ரிசபம் என்று அழைக்கப்படும் துத்தம்.

3- காந்தாரம்என்று அழைக்கப்படும் கைக்கிளை

4 மத்திமம் என்று அழைக்கப்படும் உழை.

5-- பஞ்சமம் என்று அழைக்கப்படும் இளி

6- தைவதம் என்று அழைக்கப்படும் விளரி

7- நிசாதம் என்று அழைக்கப்படும். தாரம்.


இதுவே சுரங்கள்7 ஆகும்.


சுரஸ்தானம்- என்பதை இசை ஒலி நிலை என்று குறிப்பிடலாம்.

இவ்வாறு 12 இசை ஒலி நிலைகள் உண்டு சட்ஜம் பஞ்சமம் என்ற ஒலி நிலைகளோடு ரிசபம் காந்தாரம் மத்திமம் தைவதம் நிசாதம் என்ற 5 ஒலி நிலைகளும் தனித்தனியே உள்ள 2 பிரிவுகளோடு சேர்ந்து 12 இசை ஒலி நிலையாகியது பன்னிரு சுரஸ்தானங்கள் பன்னிரு வீடு என்றும் பன்னிரு நிலம் என்றும் சொல்லப்படும்.


அன்புடன்

தமிழ் குயில்

ராகினிஜெர்மனி.

http://rahini.blogspot.com/http://thiraviyam.blogspot.com/இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்

Monday, December 17, 2007

இசைப்பயணம்.





கவிதைக்குயிலினின் இசைப்பயணம்

ஓரு நாட்டின் பண்பாட்டு வளத்தையும், கலைப்பிரிவின் இசைத்திறத்தையும் வெளிப்படுத்தும் எந்த நாட்டு மொழியிலும் இந்த இசைக்கு ஒரு தனித்துவம் உள்ளதால், எங்கும் எந்தத் தாய்மொழியிலும் கொடுக்கப்படும் இசை புகழ்பெற்றதே.
இசைக் கருவிகளில் தோற்கருவிகள் மட்டுமே முப்பதுக்கு மேல் இருந்தன என்பார்கள். அதில் அகமுடிவு புறமுடிவு என அக்கருவிகளில் வகைப்படுத்தப்பட்டன. அகமுடிவு அமைதி கூட்டும் இன்னிசைக்கும், புறமுடிவு ஆராவரச் செயல்களுக்கு உரியதென்றும் உள்ளது. பண்களும் கூடக் காலத்துக்கேற்றாற் போல் வகைப்பட்டிருந்தன. இதில் தமிழ் இயற்கை மொழியாதலால் தமிழிசையும் இயற்கை இசையாகும். வில் நாண் தெறித்த ஒலியில் இருந்து யாழும், மூங்கிலில் வண்டுதுளைத்த ஓட்டை வளியே காற்றுப் புகுந்து வரும் ஒலியினைக் கேட்டு குழழும் கண்டு பிடித்தனர், இசைக்கு முலமான ஸ்வரங்களைத் தமிழின் உயிர் ஏழுமே தந்தன. இசை முறையில் ஆரோகண, அவரோகம் என வகுக்கப்பட்டுது இதைச் சேக்கிழர் ஆரோசை, அமரோசை என்று குறிப்பிட்டார்.
மக்கள் வாழ்க்கைக்கு இசை இனியதோர் மருந்தாகும். இன்பத்தில் மட்டும் இல்லாமல் துன்பத்தைத் தூக்கி எறியவும் இசை துணையாக உள்ளது. உழைப்பின் களைப்பைப் போக்க ஒரு மருந்தாகவும், மகளிரின் உள்ளத்தை மயக்கி, அவர்தம் அடாத கொடுமைகளில் இருந்து வழிச் செல்வோரைக் காத்ததாக இலக்கியம் பேசுகின்றது. அன்றைய காலத்தில் கூறப்பட்ட இந்த உண்மை இன்றும், என்றும் நோய் தீர்க்கும் மருந்தாக இருக்கும் இசைக்கு மிஞ்சிய வரம் ஏது? வண்டுகளின் ரீங்காரத்தில் புதர்களும் வாய் மலர்ந்தனவாம். இசைக்கு எங்கும் எதிலும் ஒரு மகத்துவம் உண்டு. இசையை ரசித்தால் மட்டும் போததாது. அதோடு நாம் கலந்து விடனும் அப்போதுதான் இசையை இன்பமாக ரசிக்க முடியும்.
இசை உணர்வுகளுடன் ஐக்கியமாகிப்போவதால் தான் நாம் அதனோடு ஆட்படுத்தப்படுகின்றோம். இன்றைய நிலையில் ஆடலும் பாடலும் தனித்தனியாகிய போதிலும், தொடக்கத்தில் இரண்டுமே ஒருங்கிசைந்தன. இந்தப் பிணப்புதான் இசை எதுவாக இருந்தாலும் நம்மை அசைக்கின்றது. அடி எடுத்து ஆடுவதற்குக் கூட இசை அசைவாக இருக்கணும், அதற்குரிய தாளம் சுருதி சேரனும் அப்போதுதான் நடனம் கூடச் சரியாக அமையும். ஆடலில் பிரிந்த பாடலுக்கு இசையமைதி தேவை. அதன் பொருற்டே எழுந்தன யாப்பு இசை இசையமைதி வருமாயின் யாப்பமைதியும் தானே அமையும். இலக்கியம் தெரிந்தவர்கள், இசை அறியாதவர்கள், இசை அறிந்தவர்கள், இலக்கியம் அறியாதவர்கள் என்று ஒருகாலத்தில் பேசப்பட்டது.
இதன் பொருட்டோ என்னவோ கர்நாடக இசை என்று அழைக்கப்படும் தமிழிசை பற்பல காரணங்களை முன்னிட்டு உருவம் தெரியாமல் காட்சி அளிக்கின்றது. இருப்பினும் தழில் இலக்கியத்தோடு தொடர்பு கொண்டுள்து.
இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்பது பொருள். மனிதனையும், மற்ற உயிரினங்களையும், இறைவணையும் இசைய வைக்கின்றது. இதோடு இணங்கச் செய்கின்ற இறைவன் கூட இசை வடிவமாய் இருக்கின்றான்.என்றது. இசை ஒரு அரும் சாதனம். இசை கட்டுப்பாடான, இனிமையான ஒலியாகும். இசை என்றாலே இனிமை, இனிமை இல்லை என்றால் அது இரைச்சல். இசையை வட மொழியில் நாதம் என்று அழபப்பார்கள். ஏன், இறைவன் கூட இசை வடிவில் இருக்கின்றான்.
பிறப்பு முதல் இறப்பு வரை இசை. இசை எங்கும் ஒலித்துகொண்டே இருக்கும்.
அன்புடன்,

தமிழ்க் குயில்
ராகினி,

ஜெர்மனி.