Friday, February 29, 2008

ஒவ்வொரு அமைப்புக்கள்

என் குரல் வடிவில் வரும் சிறுகதைகள் இங்கே


http://kuyil.mazhalaigal.com/



ஸ்தாயி

---------


சட்ஜம் முதல் நிசாதம் வரையிலுல்ல சுரக்கோர்வையை அல்லது சுர எல்லையை ஒரு ஸ்தாயி என்கின்றோம்.

இவை மூன்று வகைப்படும்


1-- மத்தியஸ்தாயி

2--மந்திரஸ் தாயி

3-- தாரஸ்தாயி
பண்டைக்காலத்து பேரியாழில் மெலிவு ;சமன் வலிவு ஆகிய மூன்று மண்டிலங்களும் அமைந்திருந்தன என்றும்; மந்திரஸ்தாயிக்கு கீழே உள்ள அன மந்திரஸ்தாயி அதி மெலிவு மண்டலம் என்றும் தாரஸ்தாயிக்கு மேலே உள்ள அதிதாரஸ்தாயி அதிவலி மண்டிலம் என்றும் அழைக்கப்படும் என்று விபுலானந்தர் எழுதிய யாழ் நூல் என்ற இசை நூலில் அறிந்தோம்.


இந்த வலிவு மண்டிளக் குரல் இரட்டித்து ஒளிக்கின்றது அதனால் இதற்கு இரட்டித்த குரல் என்றும் உயர் குரல் என்றும் சொல்லப்படும்.

எனவே தரஸ்தாயி சட்ஜம் உயர் குரல் என்று அழைக்கப்பட்டன.


பூர்வாங்கம்- உத்திராங்கம்.


ஸரிகமபதநிஸ் என்ற சுரக்கோர்வையில் முன் பகுதியாகிய ஸரிகம.பூர்வாங்கம் என்றும். பின்பகுதியாகிய பதநிஸ் உத்தராங்கம் என்றும் அழைக்கப்படும் இதைதான் முன்னர்பாகம் பின்னர்பாகம் என்று பழந்தமிழர் கூறினர்.



சுவராவளி.


சுவரம்-ஆவளி- சுவராவளி
ஆவளி என்றால் வரிசை என்று சொல்லப்படும். சுவராவளி என்றால் சுரங்களின் வரிசை என்று சொல்வது. இதை சுரளி வரிசை என்றும் கோவை வரிசை என்றும் சொல்வதுண்டு.



ஜண்டவரிசை
------


இதன் பொருள் ஒவ்வொரு சுரமும் இரட்டையாக வரும்படி அமைக்கப்பட்ட சுரவரிசைக்கு ஜண்டவரிசை என்று பொருள் இதை இரட்டைகோவை என்றும் சொல்வதுண்டு. சுவராவளி கற்றபின் ஜண்டவரிசை பயில வேண்டும்அப்போதுதான் கற்பதற்கு சுலபமாக இருக்கும்.


கெச்சுஸ்தாயி வரிசை

---

இதை உயர் குரல் என்று அழைப்பது. தாரஸ்தாயி சட்ஜத்துக்கு மேலுள்ள சுரங்களில் பஞ்சமம் வரைடி பயிற்சி அழைப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட வரிசை இதை வலி மண்டில வரிசை என்றும் சொல்வது.


தக்குஸ்தாயி

---


மத்தியஸ்தாயி சட்ஜத்துக்கு கீழே உள்ள சுரங்களில் பஞ்சமம் வரை பயிற்ச்சுpக்கு ஏற்படுத்தப்பட்ட வரிசைதான் ஆனால் இதை மெலிவுமண்டல வரிசை என்றும் சொல்வது .


தாட்டுவரிசை

-------------


சுரங்களை இடையிடையே விட்டுத்தாண்டிச் செல்லும் வரிசை எனவே இதற்கு பொருத்தமாண பெயர் தாண்டு வாரிசை யாகும்.


தாளம்.
--

பாட்டின் போக்கை அழகு படுத்துவது அதாவது வரை முரை படுத்துவது தாளம்.தாளம் அமைந்தாள் தான் பாடும் சுரஞ்கள் சரியாக அமையும் சில வாத்தியக் கலைஞர்களை கவனித்தால் அவர்கள் கை இசைக்கருவியை வாசிக்கும் போது அவாக்ள் கால் தாளம் போடும் பாடல் அமைவதற்கு தாளம் முக்கியம்.

அலங்காரம்.

--------

வெவ்வேறு தாளத்தின் இங்க அமைப்புக்கு தகுந்தால் போல் ஒவ்வோரு விதமாக அமைக்கப்பட்ட சுர வரிசைக்கு அலங்காரம் என்ற பெயர். தாளத்துக்கு ஏற்ற சுரங்களை அடுக்குவதால் இதை அடுக்கு அணி என்றும் சொல்வது. இப்படி 7 அலங்காரங்கள் உண்டு


1- துருவம்

2- மட்டியம்

3- திரிபுடை

4- ரூபகம்

5- ஜம்பை

6- அட

7- ஏகம்.


இதுதான் அலங்காரத்தின் சிறப்பு



அட்சர காலம்

--

அட்சரம் அட்சராகாலம் இரண்டும் ஒன்று தாளத்துக்கு நாம் பயன்படுத்தப்படும் அடிப்படையான எண்ணிக்கைக்கு அட்சரகாலம் என்று சொல்வது அட்ச்சரங்களின் எண்ணிக்கை தாளத்திற்கு தாளம் மாறுபடும்.

ஆதி தாளத்துக்கு 8 அட்சரங்கள் ரூபகதாளத்திற்கு 6 இப்படி ஒவ்வொரு தாளம் ஒவ்வொரு எண்ணிக்கை கொண்டவை.



ஆவர்த்தம்

--

எந்த ஒரு தாளத்தை எடுத்துக்கொண்டாலும் அதை ஒரு முறை முழுமையாக போடும் போது அல்லது இசைக்கருவியில் வாசிக்கும் போதும் அதை ஒரு ஆவர்த்தம் என்ற அழைக்கின்றோம்.

இதுதான் ஆதி தாளத்தின் 8அட்சரகாலம்.

--
அன்னியசுரம்


சில ராகம் சில சமயங்களில் வழக்கமாக வரவோண்டிய சுரங்களுக்கு மாறாக வேற்ற சுரங்கள் வரலலாம். அவற்றிக்குத்தான் அன்னிய சுரம் என்று பொருள் காம் பொதி ராகத்தில் காகலி நிசாதமம் பிலகறி ராகத்தில் ராகத்தில் கைசிகி நிசாதமும் அன்னிய சுரங்களாகும் அhற்றங்களாகும் போதுதான் அன்னிய சுரங்கள் என்ற பொருள்




Tuesday, February 26, 2008



என் குரலில் குழந்தைகளுக்கான சிறுகதை களை கேட்டு மகிழ இங்கே செல்லுங்கள்

http://kuyil.mazhalaigal.com/podcast.php