Thursday, March 19, 2009

பாகம் 2

கிரியை.

தாளத்தின் அங்கங்களை கைச்செயலில் காட்டுவதே கிரியை எனப்படும் இதன் வைக இரண்டாகும்.

1- சப்த கிரியை
2- நிசப்த கிரியை

தாளத்தின் அங்கத்தினை கைகளினால் ஓசையுடன் காட்டும் போது சப்த கிரியை என்று பெயர். உதாரணமாக ஆதி தாளத்தை எடுத்துக்கொண்டால். லகுவின் முதல் அட்சரத்தைத் தட்டிக் காட்டுகின்றோம். இது சப்த கிரியை என்பது. அதன் விரல் எண்ணிக்கை தான் நிசப்தகிரியை.

அடுத்த துருதத்தின் ஆரம்பம் தட்டு. சப்த கிரியை கையை வீசிப் போடும்போது நிசப்த கிரியை, அடுத்து வரும் துதுருதத்தின் தட்டு சசப்த கிரிய, அடுத்து வீச்சு நிசப்த கிரியை. இதுதான் ஆதிதாளத்தின் அடையாளத்தோடு ஒவ்வொரு தாள அமைப்புக்கும் ஏற்படும் பெயர்.

ஆதி தாளம் முதல் தட்டு, அதன் பின் 3விரல் எண்ணிக்கை, அதன் பின் ஒரு தட்டு, அதன் பின் கையை வீசுதல், அதன் பின் ஒரு தட்டு அதன் பின் கையை வீசுதல். இதன் எண்ணிக்கை 8 ஆகும்.

சப்த கிரியைகள் என்றால்:- அனு துருதம்; துருதத்தின் ஆரம்பத்தட்டு; லகுவின் ஆரம்பத்தட்டு; குரு; பலுதல்; காகபாதம்; ஆகியவைகளின் ஆரம்பத்தட்டு.

நிசப்த கிரியைகள் ;- துருதின் வீச்சு ;லகுவின் விரல் எண்ணிக்கை; குரு; புலுதல்; காகபாதம்; இவைகளின் ஆரம்ப தட்டை தொர்டவது கிரியைகள்.

கிரகம்.

ஒரு தாள ஆவர்த்தத்தில் பாட்டு ஆரம்பிக்கும் இடத்தின் போது கிரகம் அல்லது எடுப்பு என்று சொல்வார்கள்.

இதுவும் இரண்டு வகைப்படும்.

1- சமக்கிரகம்
2- விசமக்கிரகம்.

தாள ஆவர்த்தம் ஆரம்பிக்கும் அதே சமயத்தில் பாட்டும் ஆரம்பிக்குமானால் அதற்கு சம கிரகம் என்று பெயர். கல்யாணி ராகத்தில் தாள ஆவர்த்தனம் ஆரம்பிக்கும் போதே பாட்டும் ஆரம்பமாகும்.

ஜதி

ஜதி லகுவின் எண்ணிக்கையை நிர்ணயிக்கிறது லகுவிற்கு 5 ஜதிகள் உண்டு.

திச்ரம்
சதுஸ்ரம்
கண்டம்
மிச்சரம்
சங்கீர்ணம்

இந்த 5 ஜாதிகளும் அமைப்பால் தான் 7 தாளங்கள் 35 தாளங்களாக விரிவடைகின்றன.

யதி

ஒரு தாளத்தின் அமைப்பில் அங்கங்களை பல வகைகளில் விவரித்து காட்டும் முறைக்கு யதி என்று பெயர். இது 6 வகைப்படும்.

சம யதி
கோபுச்ச யதி
ச்ரோதோவக யதி
டமரு யதி
மிருதங்க யதி
விசமயதி.

லயம்

தாளத்தின் காலப்பிரமாணமே லயம் என்பது இது 3 வகைப்படும் விலம்பித லயம்
மத்திய லயம்
துரித லயம்

விரம்பித லயம் தாளத்தின் போக்கு மெதுவாக செல்லும் போது-
மத்திய லயம் தாளத்தின் போக்க மெதுவாக செல்லும் போது-
துரித லயம் தாளத்தில் மெதுவாக செல்லும் போது- ஏற்படுகின்றது.

களை

ஒரு தாள அச்சரத்தில் காணப்படும் சிறிய பகுதிதான் களை என்பதாகும் இது 3 வகை ப்படும்.

ஏக களை
துவி களை
சதுஸ்ரகளை
கீதங்களின் ஏக களையையும் வர்ணங்களில் பல கிருதிகளிலும் பல்லவிகளில் சதுஸ்ர களையையும் கண்கின்றோம்.

மார்க்கம்

மார்க்கம் என்றால் வழி என்று பொருள். ஓர் இசை வடிவத்தில் ஒரு தாள எண்ணிக்கைக்கு இத்தனை சுரங்கள் அமைக்கப்பட்டிருப்பதை இசை வடிவத்தின் மார்க்கம் என்று சொல்லகின்றோம். இது 6 வகைப்படும்.

தட்சிண மார்க்கம்
வார்த்திக மார்கம்.
சித்திர மார்க்கம்
சித்திர தர மார்க்கம்.
சித்திர தம மார்க்கம்
அதி சித்திர தம மார்க்கம்.

இந்த 6 மார்க்கமும்

முதல் 3 ம் பல்லவிகள் பாடும் துறையில்தான் பயன்படுத்தப்படுகின்றது.
மகுதி 3ம். கிருதிகளிலும் மற்றைய இசை வடிவங்களிலும் கையாண்டு வருகின்றன


No comments: