தாளத்தின் 10 உயிர் நிலைகள்.
தாளத்தின் 10 உயிர் நிலைகள் அல்லது முக்கிய அம்சங்கள் என்று சொல்லப்படுவன. இவைகள்.1- காலம்
2- அங்கம்.
3- கிரியை
4- கிரகம்
5- ஜதி
6- யதி
7- லயம்
8- களை
9- மார்க்கம்
10- பிரஸதாரம்
இதில் முதல் காலம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
தாளப்போக்கின் அளவுக்கும் பாட்டு செல்லும் வேகத்தின் அளவுக்குமுள்ள தொடர்பைக் குறிப்பதே காலம் என்பார்கள்.
இசை பயிலத் துவங்கும் போது ஒரு தாள அட்சர எண்ணிக்கைக்கு ஒரு சுரமாகக் கொள்வதை முதல் காலம் என்றம் என்றும் ஒரு தாள அட்சர எண்ணிக்கைக்கு இரண்டு சுரங்களைக் கொள்வதை இரண்டாம் காலம் என்றும் நான்கு சுரங்களைக் கொண்டால் மூன்றாம் காலம் என்றும் வரையறுத்துச் சரளி வரிசைகள் கற்றுத் தரப்படுகின்றன. இவற்றுடன் மேல் ஸதாயி வரிசைகளும், கீழ் ஸ்தாயி வரிசைகளும், தாட்டு வரிசைகளும், அலங்காரமும் கற்றுத் தரப்படுகின்றன.
வர்ணங்களையும், கீர்த்தணைகளையும், கிருதிகளையும் பாடும் போது ஒரு தாள அட்சரத்துக்கு நான்கு சுரங்கள் என்ற வகையில் முதல் காலத்தைப் பாடி, பிறகு எட்டு சுரங்களை இரண்டாவது காலத்திலும், பதினாறு சுரங்களை மூன்றாவது காலத்திலும் இன்று பாடப்பட்டு வருகின்றன.
அதுதான் காலத்தின் பெருமையும் வழக்கமும்.
அடுத்தது அங்கம் என்றால் என்ன என்று பார்ப்போம்.
தாளத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் அதன் அங்கங்கள் என்று சொல்லப்படும். இவை கூட ஆறு வகைப்படும் இவற்றை சடாங்கங்கள் என்று அழைப்பதுண்டு.
1- அனுதுருதம்- அட்சர எண்ணிக்கை - 1
2- துருதம் அட்சர எண்ணிக்கை - 2
3- லகு அட்சர எண்ணிக்கை - 3.4.5.7.9
4- குரு அட்சர எண்ணிக்கை - 8
5- புலுதம் அட்சர எண்ணிக்கை - 12
6- காபாதம் அட்சர எண்ணிக்கை - 16
அனுதுருதம், துருதம், லகு ஆகிய இவை மூன்றும் சப்த தாளங்களில் வருவதை நாம் காணலாம். குரு, புலுதம், காபாதம் ஆகியவை 108 தாள அமைப்பில் வருவாதாக கூறப்படுகின்றன.
சடாங்கங்களுடன் விராமம் என்ற ஓர் அங்கத்தை ஒவ்வொரு இடங்களிலும் பொருத்தமாகச் சேர்க்கும் போது சோடசாங்கங்கள் என்று கூறப்படுகின்றன. இதில் கூட பதினாறு பிரிவுகள் உண்டு.
அனுதுருதம்
துருதம்
துருத விராமம்
லகு
லகுவிராமம்
லகு துருதம்
லகு துருத விராமம்
குர
குரு விராமம்
குரு துருதம்
கரு துருத விராமம்
புலுதல்
புலுதவிராமம்
புலுதுருதம்
புலுததுருதவிராமம்
காகபாதம்.
என்று. ஒவ்வொன்றின் விளக்கங்களையும் பார்க்கும் போது ஒன்றோடு ஒன்று சேர்ந்தே உள்ளன.